பண கஷ்டம்! குடும்பத்திற்காக சினிமா விட்டு விலகும் சீரியல் நடிகர்!

raghavendran kanakalumkaalangal KKK serialactor
By Edward Feb 03, 2022 05:25 PM GMT
Report

90ஸ் கிட்ஸ்களை மிகவும் கவர்ந்த சீரியல் பிரபல தொலைக்காட்சியின் கனா காணும் காலங்கள் தான். பள்ளிப்பருவத்தை மையமாக எடுக்கப்பட்ட இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஒளிப்பரப்பட்டது.

அந்த சீரியலில் நடித்தவர்கள் பலர் நல்ல ஒரு இடத்திற்கு வந்துள்ளனர். அதில் புலி கதாபாத்திரத்தில் நடித்த ராகவேந்திரன் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வருகிறேன்.

சம்பளம் அவ்வளவு பெரிதாக இருக்காது. 12 நாட்கள் படப்பிடிப்பு நடந்து ஒரே ஒரு காட்சி மட்டும் தான் சிறிய நடிகர்களுக்காக ஒதுக்குவார்கள். பிச்சைக்காரர்களை விட உதவி இயக்குனர்கள் சிறிய நடிகர்களின் வாழ்க்கை மோசமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் என் குடும்பத்தினை அந்த வருமானம் கொண்டு பார்த்துக்கொள்ள முடியவில்லை. அதனால் இனிமேல் நடக்க போவதில்லை என்றும் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்லவுள்ளதாகவும் கூறியுள்ளார் ராகவேந்திரன்.