லீக்கான ஜனநாயகன் படத்தை இத்தனை பேர் ஆன்லைனில் பார்த்துள்ளார்களா? அதிர்ச்சி தகவல்..

Vijay Gossip Today H. Vinoth JanaNayagan
By Jai Jul 02, 2026 01:00 PM GMT
Report

ஜனநாயகன்

இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமாக எடுக்கப்பட்டது தான் ஜனநாயகன். பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் படத்தின் தணிக்கை பிரச்சனையால் தள்ளிப்போனது.

லீக்கான ஜனநாயகன் படத்தை இத்தனை பேர் ஆன்லைனில் பார்த்துள்ளார்களா? அதிர்ச்சி தகவல்.. | Jananayagan Over 1 2 Crore People Watched Pirated

இதனையடுத்து விஜய் முதலமைச்சராக பதவியேற்றப்பின் படம் ஜூலை மாதம் ரிலீஸாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக சில நபர்களால் லீக் செய்யப்பட்டது. இதனால் விஜய், படக்குழுவினர் உட்பட, ரசிகர்களும் அதிர்ச்சியில் மூழ்கினர்.

இந்நிலையில் ஜனநாயகன் படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியான வழக்கு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் புகாரளிக்க சென்னை சைபர் கிரைம் போலிசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு விசாரணை செய்தனர். வழக்கில் கைது செய்யப்பட்ட ரஜினி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

லீக்கான ஜனநாயகன் படத்தை இத்தனை பேர் ஆன்லைனில் பார்த்துள்ளார்களா? அதிர்ச்சி தகவல்.. | Jananayagan Over 1 2 Crore People Watched Pirated

1.20 கோடி

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளது என்று காவல்துறையினர் வாதிட்டனர். காவல்துறையின் வாதங்களை ஏற்று நீதிபதிகள் அவர்களின் ஜாமீனை தள்ளுபடி செய்தனர். மேலும், சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.