தனது பெயரை அதிரடியாக மாற்றிய நடிகர் ரியோ ராஜ்...
Tamil Cinema
Rio Raj
By Yathrika
ரியோ ராஜ்
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் தனது சினிமா பயணத்தை தொடங்கி இப்போது வெள்ளித்திரையில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருபவர்.
ஜோ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ரியோ ராஜ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது.

இந்தப் படமும் அவருக்கு செம வெற்றியை கொடுத்துள்ளது, இந்த வருடம் வெளியான படங்களில் நல்ல லாபம் கொடுத்த படமாக ஆண்பாவம் பொல்லாதது படம் உள்ளது.
இப்பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும், இயக்குனருமான மிஷ்கின் பேசும்போது, ரியோ ராஜ் உங்களது பெயரை இனி ரியோ என்று வைத்துக் கொள்ளுங்கள், ராஜ் இறங்குவது போல் உள்ளது என்றார்.
அவரது கருத்தை ஏற்றுக்கொண்ட ரியோ ராஜ் தான் நடிக்கும் புதிய படமான ராம்In லீலா படத்தில் ரியோ என்றே தனது பெயரை பயன்படுத்தியுள்ளார்.
