கதவை திறக்கலைனா செத்துடுவேன்!! நள்ளிரவில் ஐஸ்வர்யா ராயை டார்ச்சர் செய்த பிரபல நடிகர்
ஐஸ்வர்யா ராய்
21 வயதில் 1994ல் மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்று பிரபலமாகி மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து ஒரு மகளை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்வதற்கு முன் நடிகர் சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய் காதலில் இருந்து பின் விலகினார்.
அதற்கு காரணம் சல்மான் கான், ஐஸ்வர்யா ராயிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும் அவரின் கட்டுப்பாட்டி ஐஸ்வர்யா ராயை வைத்திருக்க முயற்சி செய்ததாகவும், சல்மான் கானின் அனுமதியில்லாமல் படத்தில் கையெழுத்து இடக்கூடாது, எந்த நடிகருடன் நெருக்கமாக நடிக்கக்கூடாது என்று பல கண்டீஷன்களை போட்டிருக்கிறார்.
சல்மான் கான் டார்ச்சர்
இதனால் மன வெறுத்துப்போன ஐஸ்வர்யா ராய், சல்மான் கானை பார்பதை தவிர்த்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியில் வரமாலே பல நாட்கள் வீட்டுள்ளேயே இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சல்மான் கான் ஒரு நாள் நள்ளிரவில் ஐஸ்வர்யா ராயின் வீட்டுக்கு வந்து கதவை தட்டியிருக்கிறார்.
இப்போது கதவை திறக்கவில்லை என்றால் 17வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியிருக்கிறார். சல்மான் கத்திய சத்தத்தை கேட்டு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டதால், ஐஸ்வர்யா ராய் கதவை திறந்திருக்கிறார்.
இதுகுறித்து போலிசிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஐஸ்வர்யா ராய் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.