நடிகையின் சொத்துக்காக திருமணம் செய்து கடைசியில் ஏமாற்றிய நட்சத்திர நடிகர்.. யார் தெரியுமா?
Sarath Babu
By Dhiviyarajan
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர் தான் சரத் பாபு. இவர் 1977 -ம் ஆண்டு வெளியான "பட்டின பிரவேசம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் ரஜினியுடன் சேர்ந்து முத்து, அண்ணாமலை, நெற்றிக்கண், முள்ளும் மலரும் என பல படங்கள் நடித்துள்ளார். சரத் பாபு 1981 -ம் ஆண்டு ராமா பிரபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் சரத் பாபு என்னுடைய சொத்துக்காக தான் என்னை திருமணம் செய்து கொண்டார் என்று ராமா பிரபா குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு சரத்பாபு, "நான் என்னுடைய சொத்துக்களை விற்று ராமா பிரபாவிற்கு வீடு வாங்கி கொடுத்தேன். நான் அந்த வீட்டை தான் திருப்பி எடுத்து கொண்டேன்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.