விஜய்யை அசால்டா நினைச்சிட்டு இருக்கீங்க..நிக்க முடியாது!! காட்டமாக பேசிய நடிகர்..
நடிகர் விஜய்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவருக்கு ஏதாவது ஒரு இடத்தில் இருந்து பிரச்சனைகள் வந்துக் கொண்டே இருக்கிறது.

கரூர் நெரிசல் விவகாரம், ஜனநாயகன் ரிலீஸ் விவகாரம், சங்கீதா விவாகரத்து விவகாரம், திரிஷா திருமண நிகழ்ச்சி விவகாரம் வரை தற்போது வரை சிக்கல்களை சந்தித்து வருகிறார் விஜய். இதற்கு சிலர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசி வருகிறார்கள்.
அந்தவகையில் நடிகர் ஷாம் விஜய் குறித்து பகிர்ந்து கொண்ட விஷயம் இணையத்தில் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் ஷாம்
அதில் நடிகர் ஷாம், யார் யாரோ விஜய் சாருக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்கிறத பார்த்தால், எனக்கு காமெடியாக இருக்கும். டேய் உங்களுக்கு தெரியாது அவரை பத்தி, விஜய் அண்ணா முன்னாடி ஒருத்தர் நிக்க முடியாது.
எவ்ளோ பிரச்சனையை சந்தித்து இருப்பாரு, எவ்ளோ மனதைரியம் இருந்தால் சினிமா வேண்டாம்னு அரசியலுக்கு வந்து இருப்பாரு. இதக்கூட யோசிக்காமல் அவர் மேல் குற்றச்சாட்டு வைக்குறீங்க என்று நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார்.