2026ல் வசூல் வேட்டை நடத்திய டாப் 10 படங்கள்..
இந்திய சினிமாவில் ஒட்டுமொத்தமாக ஒரு வருடத்திற்கு பல ஆயிரம் திரைப்படங்கள் ரிலீஸாகிறது. அதில் ஒருசில படங்களே வெற்றியை சந்திக்கிறது. அப்படி 2026ல் இதுவரை வெளியாகிய படங்களில் வசூல் வேட்டை நடத்திய டாப் 10 படங்கள் என்ன என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த லிஸ்ட்டில் 10வது இடத்தில் ரூ. 25 கோடி பட்ஜெட்டில் உருவாகி நிவின்பாலி, மமிதா பைஜு நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் படம் வெளியாகி ரூ. 330 கோடி வசூலை எட்டியது.
9வது இடத்தில் மிர்சாபூர் தி மூவி படம் 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உலகளவில் ரூ. 335 கோடி வசூலை பெற்றது.
ராம் சரன், ஜான்வி கபூர் நடித்த பெத்தி படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 355 கோடி ரூபாயை வசூலித்து 8வது இடத்தில் இருக்கிறது.
7வது இடத்தில், யஷ், கியாரா, நயன் தாரா உள்ளிட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகிய டாக்ஸிக் படம் இதுவரை ரூ. 342 கோடி வசூல் வேட்டையாடியும் ஃபிளாப் படமானது.

சூர்யா, ஆர் ஜே பாலாஜி நடிப்பில் 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வெளியான கருப்பு படம் ரூ. 360 கோடியை அள்ளியது.
இந்தியில் வெளியான பார்டர் 2 படம் 275 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ. 450 கோடியை வசூலித்து இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தில் இருக்கிறது.
வெறும் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தியில் வெளியான ஹனுமான் அன்ஷ் என்ற படம் ரூ. 460 கோடியை வசூலித்து 4வது இடத்தில் இருக்கிறது. அஜய் தேவ்கன் நடித்த த்ரிஷ்யம் தி கன்க்ளூசன் படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி ரூ. 577 கோடி வசூலை எட்டி 3வது இடத்தில் இருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 760 கோடி வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
2026ல் வசூல் வேட்டையாடிய படங்களில் டாப் 1 இடத்தில் இருக்கிறது துரந்தர் தி ரிவெஞ்ச். முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து 2ஆம் பாகம் ரூ. 1800 கோடியை வசூலித்துள்ளது.
