தற்கொலைக்கு முன் சில்க் ஸ்மிதா சொன்ன வார்த்தை!! ஓடோடி இறுதிசடங்குக்கு வந்த நடிகர் அர்ஜுன்..
80-களில் தென்னிந்திய சினிமாவையே தன் கட்டுப்பாட்டி வைத்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. தன் கவர்ச்சியான பார்வை கிளாமர் ஆடையில் அனைவரையும் ஈர்த்து வந்தவர். குணச்சித்திர ரோலில் நடித்தாலும் அவரை திரையுலகம் கவர்ச்சி பொருளாகவே பயன்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது.
அப்படி அந்த காலக்கட்டத்தில் அவரின் நடன்ம் இல்லாத படமே இருக்காது. புகழின் உச்சத்தில் இருந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் ஏமாற்றமும் வலிகளாகவும் இருந்து, தனிப்பட்ட வாழ்க்கை போர் காலமாகவே அமைந்து மன அழுத்தம் தனிமையை கொடுத்திருந்தது.
இதனால் 1996 செப்டம்பர் 23 ஆம் தேதி சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவரது தற்கொலை இன்று வரையில் மர்ம்மானதாகவே இருக்கிறது.
இந்நிலையில் சில்க் ஸ்மிதா பற்றி பிரபல மூத்த பத்திரிக்கையாளர் தோட்டா பாவாநாராயணன் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். சில்க் ஸ்மிதாவின் இறுதி சடங்கிற்கு கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய ஒரே சினிமா நடிகர் என்றால் அது நடிகர் அர்ஜுன் தான்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அர்ஜுனிடம், நான் இறந்து போனால் என் சாவுக்கு நீ வருவாயா என்று கேட்டிருக்கிறார் சில்க் ஸ்மிதா. என்ன பேச்சு இதெல்லாம் என்று கூறி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளார் அர்ஜுன்.
அதன்பின் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்டதும் அர்ஜுன் ஓடி வந்து வேதனையில் இறுதி சடங்கிற்கு அஞ்சலி செலுத்தினார் என்று தோட்டா பாவாநாராயணன் தெரிவித்துள்ளார்.