நடிகர் சிவகார்த்திகேயன் காதல் தோல்வி.. அவர் காதலித்த பெண் யார் தெரியுமா

Sivakarthikeyan Actors Tamil Actors
By Kathick Feb 13, 2025 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது எஸ்கே 23 மற்றும் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பிஸியான நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தனது முதல் காதல் தோல்வி குறித்து பேட்டி ஒன்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேசியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் காதல் தோல்வி.. அவர் காதலித்த பெண் யார் தெரியுமா | Actor Sivakarthikeyan Love Failure

இதில், அவர் ஒரு தீவிரமாக காதலித்து வந்தாராம். ஆனால், இது ஒருதலை காதல் என்பதால் கைகூடவில்லையாம். மேலும் அந்த பெண் அவரது காதலருடன் சென்றுவிட்டதால், தனது காதல் தோல்வியில் முடிந்துவிட்டதாகவும், தனது வாழ்க்கையில் இருந்தே ஒரே காதல் அதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்பின், விஜய் தொலைக்காட்சியில் வேலைபார்க்கும் போது, ஷாப்பிங் மால் ஒன்றில் அந்த பெண்ணை பார்த்தாராம் சிவகார்த்திகேயன். ஆனால் அந்த பெண் முன்பு காதலித்த பையனோடு இல்லாமல் வேறொரு நபருடன் வந்திருந்தாராம். இதைபார்த்ததும், நமக்கு கிடைக்காத பெண், அவனுக்கும் கிடைக்கவில்லை என மகிழ்ச்சியடைந்ததாக அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.