மிஷ்கின் படத்திற்கு நோ சொன்ன சூர்யாவின் தந்தை.. வெளியான பரபரப்பான தகவல்

Sivakumar Mysskin
By Dhiviyarajan Feb 04, 2023 05:10 PM GMT
Report

வித்தியாசமான கதைகளை இயக்கி கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் மிஷ்கின். இவர் தற்போது தளபதி விஜய்யின் 67 படமான லியோ படத்தில் நடித்து வருகிறார்.

மிஷ்கின் - சிவகுமார்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமாரை கேட்டுள்ளார். ஆனால் சில காரணத்தால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக பேட்டி ஒன்றில் மிஷ்கின் கூறியுள்ளார்.

மேலும் அவர், " நடிகர் சிவகுமாருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. அதே போல தான் சூர்யா, கார்த்தி ஆகியோரை வளர்த்துள்ளார். அவர் நல்ல நடிகர் மட்டுமின்றி, அவர் சிறந்த தந்தை" என்று கூறியுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 பாகம் உறவாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.