அஸ்வின் பாணியில் பேசிய நடிகர் சூரி.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Ashwin Soori
By Dhiviyarajan Mar 25, 2023 12:15 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் தான் நடிகர் அஸ்வின்.

இவர் நடித்த என்ன சொல்லப் போகிறாய் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது 40 கதையை கேட்டு தூங்கிவிட்டேன் என்று கூறினார். இதற்கு பலரும் இவரை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர்.

அஸ்வின் பாணியில் பேசிய நடிகர் சூரி.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் | Actor Soori Refused 10 Movie

பிரபல காமெடியான வலம் வந்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து சூரி பல படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சூரி, " விடுதலை படத்திற்கு முன்பு 10 படங்கள் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது ஆனால் நான் அதை நிராகரித்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். தற்போது இதற்கு சிலர் சூரியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

அஸ்வின் பாணியில் பேசிய நடிகர் சூரி.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் | Actor Soori Refused 10 Movie