இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா சூர்யா சிவகுமார்.. முழு விவரம் இதோ
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாகரெட்ரோ படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் கருப்பு படம் வெளிவரவுள்ளது.
கருப்பு
இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பல ஆண்டுகள் கழித்து த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இன்று சூர்யாவின் பிறந்தநாள் என்பதால், கருப்பு படத்திலிருந்து போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளிவந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும், திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், சூர்யாவின் சொத்து மதிப்பு மற்றும் அவருடைய சம்பளம் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 350 கோடிக்கும் மேல் இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர். இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ரூ. 40 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
இந்த சொத்து மதிப்பு குறித்த விவரம் முன்னணி இணைய தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. அதிகாரபூர்வமானது அல்லது என்பது குறிப்பிடத்தக்கது.