விஜயகாந்துக்கு மண்டபம் போச்சு, எனக்கு சொத்து போச்சு!! பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகர் தியாகு..

Vijayakanth M Karunanidhi Gossip Today
By Edward Jul 06, 2023 03:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் வில்லனாகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் தியாகு. ஒரு தலை ராகம் படத்தில் தன்னுடைய சினிமா கேரியரை ஆரம்பித்த நடிகர் தியாகு, திமுக கட்சியில் பல ஆண்டுகள் பணியாற்றி அதன்பின் விலகினார்.

தற்போது 65 வயதாகும் தியாகு சமீபத்தில் பேட்டியொன்றில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பற்றிய சிலவற்றை பகிர்ந்துள்ளார். அதில், எம்ஜி ஆர்-யே படாதபாடு படுத்தினார் கலைஞர்.

மிகப்பெரிய நடிகர் என்பதால் எம் ஜி ஆர் தப்பித்துவிட்டார். ஆனால் நான், எஸ் ஏ சந்திரசேகர், ராதா ரவி எல்லாம் நாசமாகிட்டோம். பீச்சில் தங்கபேனா நடத்த நான் தான் காரணம். அப்படி தான் யாரையும் வளர விடமாட்டாரு.

அப்படிதான் அவரை நம்பி விழா நடத்தினேன். அதனால் விஜயகாந்துக்கு மண்டபம் போச்சு, எனக்கு பாரம்பரிய சொத்து போச்சு என்று கூறியிருக்கிறார்.

எனக்கு சினிமா தான் சோரு போட்டிச்சே தவிர அரசியல் எதுவும் பண்ணல. எதுக்கு என்றால் எனக்கு மொல்லாரித்தனம், முடிச்செவுக்கித்தனம், மாமா வேலைல்லாம் எனக்கு தெரியாது என்று கடுமையாக பேசியிருக்கிறார் நடிகர் தியாகு.