ஆத்தாடி என்ன அழகு.. திருமண லுக்கில் சரிகமப புகழ் தேவயானி மகள் இனியா!

Devayani Photoshoot Actress
By Bhavya Nov 23, 2025 07:30 AM GMT
Report

தேவயானி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை தேவயானி. தொட்டாச்சிணுங்கி படம் மூலம் தமிழ் திரைப்பட உலகில் கால் பதித்தார்.

அதன்பின் தொடர்ந்து படங்கள் நடித்தாலும் அஜித்துடன் அவர் நடித்த காதல் கோட்டை படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

பூமணி, சூர்யவம்சம், மறுமலர்ச்சி, தொடரும், நீ வருவாய் என, மூவேந்தர், பாட்டாளி, சமஸ்தானம், ஒருவன், தென்காசிப்பட்டணம் போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொத்தன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் மாஸ் காட்டி வந்தவர் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என 2 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் இனியா, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தன்னுடைய திறமையால், வசீகரமான குரல் வளத்தால் தனக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கினார்.

திருமண லுக்! 

இந்நிலையில், இனியா மயில் நிற பட்டுப் புடவையில், கல்யாண பெண்ணைப் போல் முழுமையாக அலங்கரித்து, நகையுடன் அழகான பாரம்பரிய தோற்றத்தில் வலம் வரும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,  

ஆத்தாடி என்ன அழகு.. திருமண லுக்கில் சரிகமப புகழ் தேவயானி மகள் இனியா! | Devayani Daughter In Saree Trending