10ஆம் வகுப்பில் நம்ம தளபதி விஜய் வாங்கிய மார்க்.. நீங்களே பாருங்க

Vijay Greatest of All Time
By Kathick May 13, 2024 12:30 PM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் தற்போது தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு ரூ. 200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய், படிப்பில் நான் கெட்டி இல்லை என பல இடங்களில் கூறியிருக்கிறார். இந்த நிலையில், 10ஆம் வகுப்பில் விஜய் வாங்கிய மார்க் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

10ஆம் வகுப்பில் நம்ம தளபதி விஜய் வாங்கிய மார்க்.. நீங்களே பாருங்க | Actor Vijay 10Th Standard Mark

சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தான் 10 வகுப்பு படித்து இருக்கிறார் நடிகர் விஜய்.

1100 க்கு அவர் 711 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 155/200, கணக்கில் 95/200, ஆங்கிலத்தில் 133/200, அறிவியல் 206/300, சமூக அறிவியல் 122/200 மதிப்பெண்களை அவர் பெற்று இருக்கிறார்.