தளபதி விஜய் பிறந்து வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா.. வீடியோ இதோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருகிறார் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகம் படம் உருவாகி வருகிறது.
அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் சினிமாவிலிருந்து விலகியுள்ளார். ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என்றும் அவர் அறிவித்து இருக்கிறார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது.
நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட வீடு நீலாங்கரையில் உள்ளது என்பதை நாம் அறிவோம். ஆனால், அவர் பிறந்து வளர்ந்த வீட்டை பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.
இந்த நிலையில், தளபதி விஜய் பிறந்து வளர்ந்த வீட்டின் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீட்டிற்கு சென்றுள்ள ஒருவர் அங்கிருந்து வீடியோ எடுத்து, இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களின் வீடு என கூறி அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Director SAC sir's House 😍❤️@actorvijay @TVKVijayHQ pic.twitter.com/4If0xoJFEA
— Vijay Social Teamⱽˢᵀ (@TST_Offcl) August 18, 2025