ஜெயிலர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Box office Jailer 2
By Karthick Raja Nov 03, 2026 11:30 AM GMT
Report

நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன திரைப்படம் ஜெயிலர். மாஸ் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்க, உலகளவில் ரூ. 635 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

ஜெயிலர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Jailer 2 Worldwide 19 Days Collection

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது என்கிற கேள்வி ரசிகர்களால் தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க கடந்த ஆண்டு ஜெயிலர் 2 அறிவிப்பு வீடியோ மாஸாக வெளியானது.

அன்றிலிருந்து இப்படத்தின் மீது தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர் அத்தகைய எதிர்பார்ப்புடன் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு வந்த ஜெயிலர் 2, ரஜினி ரசிகர்களால் மட்டுமின்றி உலகெங்கும் குடும்பம் குடும்பமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜெயிலர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Jailer 2 Worldwide 19 Days Collection

இந்த நிலையில், 19 நாட்களில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை இப்படம் தமிழ்நாட்டில் ரூ. 810 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.