தளபதி விஜய் பயன்படுத்தும் தனி விமானத்தின் விலை என்ன தெரியுமா, இதோ

Vijay
By Kathick May 05, 2025 02:30 PM GMT
Report

தளபதி விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் ஈடுபட்டு வருகிறது. ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என்றும் அறிவித்துள்ளார்.

இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கொடைக்கானலில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு, இன்று சென்னை திரும்பினார் விஜய்.

தளபதி விஜய் பயன்படுத்தும் தனி விமானத்தின் விலை என்ன தெரியுமா, இதோ | Actor Vijay Private Jet Price Details

தளபதி விஜய் சமீபகாலமாக தனி விமானம் ஒன்றில் பயணம் செய்து வருவதை நம்மால் பார்க்கமுடிகிறது. குறிப்பாக அரசியலில் களமிறங்கியபின் இதனை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், தளபதி விஜய் பயன்படுத்தி வரும் தனி விமானத்தின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் பயன்படுத்தும் தனி விமானத்தை விலை ரூ. 8 கோடி என கூறப்படுகிறது. மேலும் இந்த தனி விமானத்தின் ஒரு நாள் வாடகை மட்டுமே ரூ. 14 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது.