80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்! அந்த பழக்கத்தால் வாழ்க்கையில் ஏற்பட்ட பரிதாப நிலை..
தமிழ் சினிமாவில் நடிகர்கள் தங்களின் மார்க்கெட்டை எந்த வயது வரைக்கும் காட்டி நடிக்கும் நிலை இருக்கும். ஆனால் நடிகைகளுக்கு அது அமையாது. அந்த அளவிற்கு நடிகர்கள் இன்னும் 60 வயதான பிறகு முன்னணி நடிகர்களாக அதுவும் கோடிகளில் சம்பளம் வாங்கியும் வருகிறார்கள்.
அந்தவகையில் நடிகர்களுக்கு 80களிலேயே டஃப் கொடுத்து வந்தனர் நடிகர் விஜயன். மலையாள நடிகராக தமிழ் சினிமாவில் பாரதிராஜா படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
வில்லன் கதாபாத்திரத்தில் ரகுவனுக்கு அடுத்ததாக 80, 90களில் பேசப்பட்ட நடிகர் இவர் தான். அப்படி இருந்த விஜயன் குடிப்பழக்கத்தால் தான் 2007ல் மரணமடைந்தார் என்று கூறப்படுகிறது.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பரபரவென பல படங்களில் நடித்து வேகமாக உயர்ந்து கொண்டே இருந்த நடிகர் விஜயன் திடீரென தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் தடுமாறியதற்கு மதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.