இருக்கு ஆனா இல்லை.. திருமணம் பற்றி குழப்பி பேசிய பிரபல நடிகர்

Vishal Tamil Cinema Tamil Actors
By Yathrika Apr 21, 2024 01:30 PM GMT
Report

விஷால்

சில வருடங்களுக்கு முன்பு திருமண வயது வந்தும் சிங்கிளாகவே இருந்த நடிகர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் இப்போது மிகவும் சிலரே உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகர் விஷால். 

முதலில் ஆர்யாவிற்கு திருமணம் நடந்தால் எனக்கு என்றார், பின் நடிகர் சங்க கட்டிடம் என்றார். ஆர்யாவிற்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது.

அண்மையில் ஒரு பேட்டியில் விஷால் பேசும்போது, சல்மான் கான், பிரபாஸ் எல்லாம் இன்னும் கல்யாணம் பண்ணாம இல்லையா என முதலில் கூறியுள்ளார். 

பின் பேட்டியின் முடிவில் நடிகர் சங்க கட்டடம் வந்ததும் கல்யாணம் தான், ஆனால் பெண் யார் தெரியாது என முடித்துள்ளார். முதலில் கல்யாணம் இல்லாத மாதிரி பேசி பின் கடைசியில் இருக்கு என முடித்துள்ளார். 

இருக்கு ஆனா இல்லை.. திருமணம் பற்றி குழப்பி பேசிய பிரபல நடிகர் | Actor Vishal About His Marriage Plan