நடிகர் விஷாலுக்கு விரைவில் டும் டும் டும்.. அதுவும் இந்த பிரபல நடிகையா?

Vishal Tamil Cinema Marriage Tamil Actors
By Bhavya May 19, 2025 10:30 AM GMT
Report

விஷால்

விஷால் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. அதன் பின் இவர் நடிப்பில் ரத்னம் திரைப்படம் வெளியானது ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் இப்படம் தோல்வி அடைந்தது.

கடைசியாக விஷால் நடிப்பில் மதகஜராஜா படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

நடிகர் விஷாலுக்கு விரைவில் டும் டும் டும்.. அதுவும் இந்த பிரபல நடிகையா? | Actor Vishal Going To Marry Top Actress

சமீபத்தில், தனது திருமணம் குறித்து விஷால் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்தது. அதில், நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்த பின் நான் திருமணம் செய்ய உள்ளேன்.

ஒரு மாதமாக காதலித்து வருகிறேன். என் பிறந்தநாள் அன்று அது குறித்து தெரிவிக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.

இந்த நடிகையா? 

இந்நிலையில், அந்த பெண் யார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சாய் தன்ஷிகா தான் அது. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்களாம்.

தற்போது, விஷால் சிறப்பு விருந்தினராக பட விழா ஒன்றில் இன்று மாலை கலந்து கொள்ள உள்ளார். அங்கு அவர் திருமணம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

நடிகர் விஷாலுக்கு விரைவில் டும் டும் டும்.. அதுவும் இந்த பிரபல நடிகையா? | Actor Vishal Going To Marry Top Actress