அப்பாவுக்கு பயந்து ரகசியமாக வைத்த காதல்!! சூர்யா - ஜோதிகாவுக்கு தூது வேலைபார்த்த நடிகர்..

Suriya Jyothika Gossip Today
By Edward Jun 14, 2023 11:16 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒன்றாக நடித்து அப்போது ஏற்பட்ட காதல் மூலம் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பலர் இருக்கிறார்கள். அப்படி காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி சூர்யா - ஜோதிகா.

அப்பாவுக்கு பயந்து ரகசியமாக வைத்த காதல்!! சூர்யா - ஜோதிகாவுக்கு தூது வேலைபார்த்த நடிகர்.. | Actor Who Helped Surya Jyothika Love

தற்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சூர்யா - ஜோதிகா இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்கள். இருவரும் காதலித்து வந்த சமயத்தில் அவர்களுக்கு பிரச்சனையாக இருந்தது சூர்யாவின் தந்தை சிவக்குமார்.

4 ஆண்டுகள் காத்திருப்பு பின் தான் மகனுக்காக திருமணத்திற்கு சம்மதித்தேன் என்று சிவக்குமாரே கூறியிருந்தார். அந்தவகையில் அவர்கள் காதலித்து வந்த சமயத்தில் தூது போன அணிலாக செயல்பட்டவர் தான் நடிகர் ரமேஷ் கண்ணா.

ஜோதிகா உச்சத்தை தொடபோகும் சமயத்தில் கமல் ஹாசனுடன் தெனாலி படத்தின் சூட்டிங்கிற்காக கொடைக்கானலில் இருந்துள்ளார் ஜோதிகா. அப்படத்தில் ரமேஷ் கண்ணா நடித்தார்.

அப்பாவுக்கு பயந்து ரகசியமாக வைத்த காதல்!! சூர்யா - ஜோதிகாவுக்கு தூது வேலைபார்த்த நடிகர்.. | Actor Who Helped Surya Jyothika Love

அதே சமயம் சூர்யா, விஜய் நடித்த ப்ரென்ஸ் படத்தின் ஷூட்டிங் உடுமலைப்பேட்டை பகுதியிலும் நடிந்துள்ளது. இரு படத்திலும் ரமேஷ் கண்ணா வேலை பார்த்து வந்துள்ளார். தெனாலி படத்திற்கு வரும் போது ஜோதிகாவிடம் சூர்யா பற்றியும், ப்ரென்ஸ் படத்திற்கு போகும் போது சூர்யாவிடன் ஜோதிகாவை பற்றியும் நலம் விசாரித்து கூறுவாராம்.

ஏதாவது ஒரு விசயம் கூறவேண்டும் என்றால் இருவரும் என்னிடம் கூறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இப்படி தொடர்ந்து பல வேலைகளை இருவருக்கும் மாறிமாறி செய்து வந்துள்ளதை காமெடியாக ரமேஷ் கண்ணா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் சூர்யா தன்னை தெய்வ மச்சான் என்று கூப்பிடுவதாகவும் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.