பாதி சொத்தை தரேன்!! பெண் பிரபலத்தை கர்ப்பமாக்கி டிமிக்கி கொடுக்கும் நடிகர்...
பெண் பிரபலம்
நடிகர் ஒருவர் செய்த சேட்டைக்கு எல்லாம் பிரதிபலனை தற்போது ஒரு விஷயத்தால் அனுபவித்து வருகிறாராம். முதல் மனைவி, வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் நிலையில் திருமணத்தை மீறிய உறவில் பெண் பிரபலத்துடன் இருந்துள்ளார் அந்த நடிகர். அப்படி உறவில் இருந்தபோது அப்பெண் கர்ப்பமாக நடிகர் அதை கலைக்கச்சொல்லி இருக்கிறார்.
பெண் பிரபலம், அதெல்லாம் முடியாடு திருமணம் செய்து கொள் என்று கூறிவிட்டாராம். நடிகரோ பெண் பிரபலம் நச்சரித்ததால் திருமணம் செய்து கொண்டு பின் விட்டுவிடலாம் என்று நினைத்துள்ளார்.
அப்படி திருமணம் செய்த சில மாதங்களில், வயிற்றில் குழந்தை வளர தொடங்கியதால் நடிகர் நடவடிக்கையில் மாற்றம் வரத்தொடங்கியதை கவனித்துள்ளார். பின் நடிகரோ நான் அப்படி எல்லாம் இல்லை என்று கூறிவிட்டு முதல் மனைவியே கதி என்று இருந்துள்ளார்.
டிமிக்கி கொடுக்கும் நடிகர்
பெண் பிரபல கால் செய்து எடுக்காமல் மெசேஜிற்கும் ரிப்ளே செய்யாமல் இருந்துள்ளார். பின் பெண் பிரபலம் ஷூட்டிங் நடந்த இடத்திற்கே சென்று கத்தியும் இருக்கிறார்.
ஒருக்கட்டத்தில் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெண் பிரபலம் இணையத்தில் வெளியிட்டுள்ளார். நடிகரின் வாட்ஸ் அப்பிற்கு வெளியிட, கழுத்தில் தாலி கட்டிவிட்டாய், குழந்தை வயிற்றில் வளர்கிறது.
நிம்மதியாக வாழ்வதற்கு என்ன வழியே அதை செய், இல்லை என்றால் மானத்தை வாங்குவேன் என்று மிரட்டியும் இருக்கிறார். பெண் பிரபலம் இப்படி சொன்னதால் பயந்துப்போன நடிகர், சொத்தில் பாதி தருகிறேன், வீடியோவை கொடுத்துவிடு என்று கூறியிருக்கிறார். பெண் பிரபலமோ பணமெல்லாம் வேண்டாம் சேர்ந்து வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.