கோடியில் புரண்டும் வாடகை வீட்டில் இருக்கும் பிரபலங்கள்!! அஜித் நண்பருக்கு இப்படியொரு நிலையா..

Kavin R. Parthiban Tamil Actors
By Edward Jul 11, 2023 05:10 AM GMT
Report

சினிமா பிரபலங்கள் என்றாலே அதிக கோடியில் சம்பாதித்து ஆரம்பட வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். அவர்களுக்கு பிடித்த வீட்டினை உடனே வாங்கக்கூடிய அளவிற்கு அதிக தொகை இருக்கும். இதற்கு காரணம் அறிமுக நடிகர்களே, ஏன் குட்டி நட்சத்திரங்கள் கூட லட்சத்தில் தான் சம்பளம் வாங்குகிறார்கள்.

tamil celabrities rent house

அதே பெரிய இடத்தில் இருக்கும் டாப் ஸ்டார்கள் கோடியில் சம்பளம் பெறுகிறார்கள். கோடி மற்றும் லட்சத்தில் வாங்கும் நடிகர்கள் தனியான பங்களா, அப்பார்ட்மெண்ட் என்று வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள். ஆனால் ஒருசில நடிகர் நடிகைகள் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்களாம்.

kavin rent house

அந்தவகையில் கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வாடகை வீட்டில் இருந்து வருகிறார் நடிகர் கவின். ஏற்கனவே வாய்ப்பில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று தான் பட்ட கஷ்டத்தை கூறி அனைவரையும் கவர்ந்தார். அதுவும் பணத்தேவைக்காக தான் 5 லட்சம் மதிப்பு கொண்ட பணப்பெட்டியை எடுத்து சென்றார் கவின். அப்படி இருந்து தற்போது கோடியில் சம்பளம் வாங்கு அளவிற்கு மாறிய கவின் இன்று வரை வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறாராம்.

r parthiban rent house

அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பது நடிகரும் இயக்குனருமான ஆர் பார்த்திபன். தற்போது இயக்குவதை தாண்டி படங்களில் முக்கிய ரோலில் நடித்து சம்பாதித்து வருகிறார். சமீபத்தி பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து கோடியில் சம்பளம் பெற்றும் வாடகை வீட்டில் இருந்து வருகிறாராம்.

marimuthu rent house

அடுத்த லிஸ்ட்டில் நம்முடைய பிரபல கதாபாத்திரம் குணச்சேகரன் தானாம். எதிர் நீச்சல் சீரியலில் குணச்சேகரன் என்ற முரட்டு வில்லனாக நடித்து அனைவரையும் ஈர்த்து வருகிறார் நடிகர் மாரிமுத்து. தமிழ் சினிமாத்துறையை சேர்ந்த மாரிமுத்து, இயக்குனராகவும், நடிகராகவும் சீரியல் நட்சத்திரமாகவும் திகழ்ந்து வருகிறார்.

நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பராக இருக்கும் மாரித்து, படங்களில் லட்சத்திலும் சீரியலில் 20 ஆயிரம் சம்பளமாகவும் வாங்கி வருகிறார். அவரும் தற்போது வரை வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வருகிறாராம்.