சினிமாவில் இருந்து விலகுகிறாரா விஜய்.. அவரே வெளியிட்ட அறிக்கை
சினிமாவில் அறிமுகம் ஆன சமயத்தில் பல விமர்சனங்களை சந்தித்தாலும் அதே துறையில் சாதித்து காட்டியவர் தான் விஜய்.
இவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் கடந்த பல மாதங்களாகவே தகவல் வெளிவந்து கொண்டு இருந்தது.
சமீபகாலமாக மாணவர்களுக்கு பரிசு, புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் என விஜய்யின் நகர்வுகளும் அரசியல் நோக்கி தான் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் கட்சி பெயரை தமிழக வெற்றி கழகம் என்று அறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.
எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன்.
என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்.நன்றி.இப்படிக்குஉங்கள் விஜய்தமிழக வெற்றி கழகம்.