நடிகர் அருண் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார். ஹீரோவாக தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
அந்த சமயத்தில் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்தார் அருண் விஜய். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தடம், குற்றம் 23 என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார்.

மேலும் இந்த ஆண்டு வணங்கான் மற்றும் இட்லி கடை ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அருண் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 85 கோடி முதல் ரூ. 98 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் தகவல் தெரிவிகிறது.