பார்ட்டி முதல் ஃபாரின் டூர் வரை!! வெற்றி நடிகரின் மனைவியை மயக்கிய 3 எழுத்து நடிகர்..

Gossip Today Actors Tamil Actors
By Edward Jun 28, 2024 01:30 PM GMT
Edward

Edward

Report

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ஒருவர் டஜன் கணக்கில் படத்தை வைத்து பிஸியாக இருந்து வருகிறார். அதேசமயம் அவரை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடித்து வருகிறது. சக நடிகரின் மனைவியை மயக்கி தன் வலையில் விழ வைத்துள்ளது தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்தொல் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவரது குடும்பம் செட்டிலாகவில்லை. மிடில் கிளாஸ் ரேஞ்சில் இருந்த நடிகர் ஏகப்பட்ட உருவகேலிகளை சந்தித்தார்.

பார்ட்டி முதல் ஃபாரின் டூர் வரை!! வெற்றி நடிகரின் மனைவியை மயக்கிய 3 எழுத்து நடிகர்.. | Actors Wife Has Been Affair With Another Actor

அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தன் திறமையை காட்டி யாரெல்லாம் உருவகேலி செய்தார்களோ அவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு புகழ் உச்சிக்கு சென்றார். தற்போது தமிழ் சினிமாவை தாண்டி உலக சினிமாவிற்கே சென்று நடித்து வருகிறார். நடிகர் அப்படி உச்சிக்கு சென்றாலும் அவர் பெண்கள் விஷயத்தொல் வீக்காக இருப்பதால் சர்ச்சைகளில் சிக்குவார். யார் விவாகரத்து செய்தாலும் சரி நடிகரின் பெயர் அங்கு இடம்பெறும். அப்படி அவர் இருந்ததால் காதலித்து திருமணம் செய்த மனைவியே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நடிகரை சுற்றி புதிய பஞ்சாயத்து ஒன்று லீக்காகி இருக்கிறது. வெற்றி நடிகர் ஒருவர் தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து குழந்தை குட்டி என்று இருந்திருக்கிறார். வெற்றி நடிகரின் மனைவி கொஞ்சம் மாடர்ன் கலாச்சாரத்தை கொண்டவர் என்பதால் பார்ட்டி, ஃபன் என சுற்று இருக்கிறார். ஒரு பார்ட்டியில் 3 எழுத்து நடிகரின் அறிமுகம் கிடைக்க நடிகரும் ஜாலியாக பேச இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பார்ட்டிகளில் ஒன்றாக கலந்து கொண்டிந்தார்களாம்.

பார்ட்டி முதல் ஃபாரின் டூர் வரை!! வெற்றி நடிகரின் மனைவியை மயக்கிய 3 எழுத்து நடிகர்.. | Actors Wife Has Been Affair With Another Actor

மனைவி செல்லும் பார்ட்டிக்கு வெற்றி நடிகரும் செல்லும் வழக்கம். ஆனால் சமீபகாலமாக மனைவி யாருக்கும் தெரியாமல் 3 எழுத்து நடிகரோடு பார்ட்டிக்கு செல்லவும், வெளிநாட்டு அவுட்டிங் செல்லவும் இருந்து வந்துள்ளனர். அடம்பிடித்து ஃபாரின் டூர் சென்ற மனைவி, கணவரைவிட்டு 3 எழுத்து நடிகரோடு நேரம் செலவிட்டுள்ளார்.

சாதாரணமாக ஆரம்பத்தில் இதை எடுத்துக்கொண்ட வெற்றி நடிகர் அடிக்கடி 5 எழுத்து நடிகருக்கு இரவு நேரத்தில் போன் செய்து கடலை போட்டிருக்கிறார் அவரின் மனைவி. இதை வெற்றி நடிகர் கண்டித்ததாகவும் அதனால் இருவருக்கும் கருத்துவெறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் விவாகரத்து வரை சென்றுள்ளது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக இருக்கிறது.