காசுக்காக வற்புறுத்திய கணவர்!! வயிற்றில் குழந்தையுடன் மனோரமா எடுத்த முடிவு..
ஆச்சி மனோரமா
நாடக நடிகையாக தன்னுடைய கலைப்பயணத்தை தொடங்கிய ஆச்சி மனோரமாவிடம், நகைச்சுவை நடிகையாக நடிக்கிறாயா என்று கேட்டுள்ளார் கண்ணதாசன். 1958ல் கவியரசு கண்ணதாசன் இயக்கிய மாலையிட்ட மங்கை என்ற படத்தில் அப்படி கேட்டதற்கு நான் எப்படி நகைச்சுவை நடிகையாக நடிப்பது என்று கேட்டுள்ளார்.
அதற்கு கவியரசு, கதாநாயகியாக நடித்தால், ஒன்று இரண்டு படம் தான் கிடைக்கும். ஆனால் நகைச்சுவையாக நடித்தால் நிச்சயம் சிகரத்தை தொடுவீர்கள் என்று கூறி நகைச்சுவையில் ஆச்சி மனோரமா கொடிக்கட்டி பறக்க கவியரசு கண்ணதாசன் காரணமாகினார்.
1937ல் பிறந்த மனோரமா, தஞ்சாவூரில் வசதியான குடும்பத்தை சேர்ந்த காசியப்பன் மற்றும் ராமமிர்தம் அம்மாள் தம்பதியருக்கு பிறந்தவர். அப்பா காசியப்பன், மனைவியின் சகோதரியை இரண்டாம் திருமணம் செய்ததால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு மனோராவை அழைத்துக்கொண்டு காரைக்குடிக்கு வந்து வீட்டு வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றியிருக்கிறார்.
வசதியான குடும்பத்தில் இருந்து வந்தாலும் ஒரு வேலை சாப்பாட்டிற்கு செட்டியார் வீடுகளில் வேலை செய்தார் மனோரமா. ஓடஓட வறுமை துரத்த, வறுமையின் பிடியில் இருந்து தப்பிக்க 12வது வயதில் நாடக கம்பெனியில் சேர்ந்தார்.
அப்போதுதான் கோபிசந்தா என்ற தன் பெயரை மனோரமா என்று மாற்றி, பள்ளத்தூர் பாப்பா என்ற பெயரில் பிரபலமானார். அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்டவர்களின் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அப்போது கிடைத்து, ஒரு பக்கம் சினிமா, ஒரு பக்கம் நாடகம் என்று உழைத்துக் கொண்டே இருந்தார்.
காசுக்காக வற்புறுத்திய கணவர்
எஸ் எம் ராம்நாதன் என்பவரை காதலித்ததை அம்மா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அம்மாவை எதிர்த்து வீட்டைவிட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட கொஞ்ச நாட்களிலேயே காதல் கசக்க, இருவருக்கும் அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டது. மனோரமாவின் வயிற்றில், முதல் குழந்தை கலைந்துவிட, மனவேதனையில் இருந்துள்ளார்.
ஆனால் அவரது கணவரோ, வீட்டில் இருந்தால் பணம் வராது என, ஒரே மாதத்தில் நாடகத்தில் நடிக்கும்படி அவரை கட்டாயப்படுத்தியிருக்கிறார். கணவரின் வற்புறுத்தலால் வேறு வழியின்றி நாடகங்களில் தொடர்ந்து நடித்தார். குழந்தை பிறந்த பின், மனோரமாவை குழந்தையுடன் இருக்கவிடாமல் நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி, பணத்தின்மீதே குறியாக இருந்திருக்கிறார் மனோரமாவின் கணவர்.
ஒருக்கட்டத்தில் பொருமையை இழந்த மனோரமா, இதற்குமேல் பொறுத்துக்கொள்ளாமல் கணவரை விட்டு பிரிந்து சினிமாவில் தன் முழு கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். அப்படி தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் படங்களில் 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
தமிழில் மட்டுமே 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் ஆச்சி மனோரமா. அப்படி கொடிக்கட்டி பறந்த ஆச்சி மனோரமா கடந்த 2015ல் தன்னுடைய 78வது வயதில் உடல்நலக்குறைவால் மரணத்தை தழுவினார்.