காதலில் விழுந்த பிக்பாஸ் நடிகை அபிராமி!! புகைப்படம்..
Bigg Boss
Relationship
Tamil Actress
Actress
Abhirami Venkatachalam
By Edward
அபிராமி வெங்கடாசலம்
2018ல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் சித்ரா வினோதன் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் மாடல் நடிகை அபிராமி வெங்கடாசலம். இப்படத்தினை தொடர்ந்து, நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.

அதன்பின் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு 56 நாட்களுக்கு பின் எவிக்டாகி வெளியேறினார். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அபிராமி பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.
அதன்பின் வெப் தொடர்களில் நடித்தும் வரும் அபிராமி, அனந்தா, DVK உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது தான் காதலில் விழுந்துள்ளதாக கூறி, காதலரின் கையை கோர்த்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு நடிகை அபிராமிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.