அதை பார்த்து எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போச்சி!! கமல் பட நடிகை அபிராமி எமோஷ்னல்..
தமிழ், தெலுங்கு மொழிகளில் 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை அபிராமி. அர்ஜுன், பிரபு, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அபிராமி கமல் ஹாசனின் விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்திழுத்தார். அதன்பின் சில காரணங்களாலும் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகி குழந்தை குட்டி என்று பார்த்துக்கொண்டார்.

தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் அபிராமிக்கு விருமாண்டி படத்தில் கமல் ஹாசன் கொடுத்த டார்ச்சர் தான் அவரை திருமணம் செய்து அமெரிக்கவில் செட்டிலாக காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை அபிராமி சமீபத்தில் விஜே அர்ச்சனாவுக்கு அளித்த பேட்டியொன்றில் பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
உடல்ரீதியாக சொல்ல வேண்டும் என்றால், என்னுடைய பலவீனம் உயரமாக இருப்பது தான். நீ ரொம்ப உயரமாக இருக்க என்று ஒருசில என்னை கிண்டல் செய்வார்கள். அதனால் நிறைய படங்கள் கிடைக்காமல் போனது. அதன்பின் என் தாடை வைத்து கிண்டல் பண்ணுவார்கள். உடல்ரீதியாக சில இருந்தது.
தனிப்பட்ட விசயமாக பார்த்தால், இயற்கையாக பச்சாதாபம் பார்ப்பவள். எதையாவது பார்த்தால் கண்ணீர் வந்துவிடும். அது எனக்கு தவறாக இருந்தது, ஆனால் ரியல் வாழ்க்கையில் நான் நடிப்பது கஷ்டம், அதனால் சினிமாத்துறையில் சில போராட்டங்கள் நடந்து இருக்கு, அது ஒரு பிழை, ஆனால் அது பிழை கிடையாது என்று கூறியிருக்கிறார் நடிகை அபிராமி.