நடிகையை உயிருக்கு உயிராய் காதலித்த பாலைய்யா!! பிரபல நடிகை கொடுத்த ஷாக்..
நந்தமுரி பாலகிருஷ்ணா
தெலுங்கு சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நந்தமுரி பாலகிருஷ்ணா, 65 வயதாகியும் நடிப்பில் கவனம் செலுத்தி மாஸ் படங்களை கொடுத்து வருகிறார். அவர் நடிப்பில் அகண்டா 2 படம் உருவாகி வரும் நிலையில் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பலரது வரவேற்பையும் பெற்று வருகிறது.

நடிகராக மட்டுமில்லாமல், ஆந்திராவின் இந்துபுரம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். சேட்டை பிடித்த மனிதர் என்றும் அவரது ரசிகர்களால் புகழப்பட்டு வரும் பாலைய்யா, சிறுவயதில் இருந்தே அப்படித்தான் என்கிறார் என் டி ஆர் குடும்பத்துடன் நெருங்கி பழகிய நடிகை குட்டி பத்மினி.
மாஸ் ஹீரோவாக திகழ்ந்து வரும் பாலைய்யாவின் யாருக்கும் தெரியாத மற்றொரு பக்கத்தை நடிகை குட்டி பத்மினி பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். என் டி ஆரின் 6வது மகனான நந்தமுரி பாலகிருஷ்ணா, 14 வயதில் நடிக்கத் தொடங்கிய பாலைய்யா, என் டி ஆர் முதல்வரான காலக்கட்டத்தில் தான் பிஸியான நடிகரானார்.
அப்போது தான் பிரபல நடிகை மீது பாலைய்யா காதல் வயப்பட்டுள்ளார். அந்த நடிகை வேறுயாருமில்லை நடிகை விஜயகாந்தி தானாம்.

விஜயசாந்தி - பாலைய்யா காதல்
விஜயசாந்தியும் பாலைய்யாவும் உயிருக்கு உயிராக காதலித்ததாக குட்டி பத்மினி தெரிவித்துள்ளார். பாலகிருஷ்ணா மற்றும் விஜயசாந்தி, தெலுங்கு சினிமாவில் ஒரு வெற்றிகரமான திரைக்கூட்டணியாக இருந்தனர்.
அவர்கள் இருவரும் இணைந்து சுமார் 17 திரைப்படங்களில் நடித்துள்ளனர். படத்தில் ஹிட்டடித்த இவர்களின் கெமிஸ்ட்ரி நிஜத்திலும் காதலாக மாறியது. ஆனால் இந்த காதல் முயற்சி கைக்கூடவில்லை. இதற்கு காரணம் பாலைய்யாவின் தந்தை என் டி ஆர் தான்.

என் டி ஆர்
ஆந்திர முதல்வராக இருந்த என் டி ஆருக்கு காதல் விவகாரம் தெரிய வர, காதலை பற்றி தன் மகன் பாலைய்யாவிடம் கேட்காமல், நேராக விஜயசாந்தியை அழைத்து கேட்டிருக்கிறார்.
அதன்பின் விஜயசாந்தியிடம் பாலைய்யா உடனான காதலை கைவிட சொல்லியிருக்கிறார். தங்கள் குடும்பத்தில் வேறொரு குடும்பத்தில் பெண் எடுக்கும் பழக்கம் இல்லை என்று கூறி விஜயசாந்தியிடம் என் டி ஆர், காதலை கைவிடக் கூறியதாக குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.

என் டி ஆர் பேச்சைக்கேட்டு பாலைய்யாவை விஜயசாந்தி ஒருக்கட்டத்தில் ஒதுக்க ஆரம்பித்தார் விஷயத்தை அறிந்த பாலைய்யா, தந்தை பார்த்த பெண்ணான வசுந்தரா தேவி என்பவரை 1982ல் திருமணம் செய்து கொண்டார்.
அதேநேரம், நடிகை விஜயசாந்தி, எம் வி சீனிவாச பிரசாத் என்பவரை 1988ல் திருமணம் செய்து கொண்டார். சீனிவாச பிரசாத், நந்தமுரி குடும்பத்தின் நெருங்கிய உறவினர் என்றும் கூறப்படுகிறது.