அந்த இடம் பெருசா இருக்குனு சொன்னாங்க.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த கமல் பட நடிகை..
குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான அபிராமி, கடந்த 2000 -ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.
இதனை அடுத்து விருமாண்டி, மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை அபிராமி, தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, என்னை என்னுடைய உயரம் வைத்து கிண்டல் செய்து இருக்கிறார்கள். அதே போல என்னுடைய தாடையும் கொஞ்சம் நீளமாக இருக்கும், அதையும் சிலர் கிண்டல் அடித்திருக்கிறார்கள்.
மேலும் , 'அந்தப் பொண்ணு ரொம்ப உயரமாக இருக்காங்க' என்று சொல்லி சில திரைப்படங்களில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்று அபிராமி கூறியுள்ளார்.