என் உயிரே நீதான்!! நச்சுக் காதலில் மாட்டிக்கொண்டு.. நடிகை அனுபமாவின் பதில், ரசிகர்கள் ஷாக்

Tamil Cinema Anupama Parameswaran Actress
By Bhavya Jan 17, 2025 11:30 AM GMT
Report

நடிகை அனுபமா 

மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து, சைரன் படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாகவும் அனுபமா நடித்து இருந்தார்.

என் உயிரே நீதான்!! நச்சுக் காதலில் மாட்டிக்கொண்டு.. நடிகை அனுபமாவின் பதில், ரசிகர்கள் ஷாக் | Actress About Love

இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இந்நிலையில், காதல் குறித்த கேள்விக்கு அனுபமா கூறிய பதில் ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அனுபமாவின் பதில்

அதில், " எப்போதும் உன்னை காதலிக்கிறேன் என்ற வார்த்தை ஒரு மிகப்பெரிய பொய். என் உயிரே நீதான், நீ இல்லாமல் நான் இல்லை என்று கூறும் ஒரு நச்சுக் காதலில் மாட்டிக்கொண்டு இருப்பவர்கள் அனைவரும் உடனே அந்த காதலில் இருந்து விலகி விடுங்கள்.

என் உயிரே நீதான்!! நச்சுக் காதலில் மாட்டிக்கொண்டு.. நடிகை அனுபமாவின் பதில், ரசிகர்கள் ஷாக் | Actress About Love

இது என் அறிவுரையாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார். தற்போது, இவரின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.