அந்த படத்தில் படுக்கையறை காட்சி இருக்குமே!! அப்பாவுக்கு தெரியாமல் அதிதி சங்கர் எடுக்கப்போகும் அதிரடி..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் செல்வராகவன் 2004ல் நடிகர் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் 7ஜி ரெயின்போ காலணி படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கண்டார்.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தினை பிடித்தார் நடிகை சோனியா அகர்வால். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக செல்வராகவன் தரப்பில் கூறப்படுகிறது.
அதற்காக ரவி கிருஷ்ணாவே இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்கவுள்ளார்களாம். இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்க இருப்பதால் கதாநாயகியாக நடிக்க நடிகை அதிதி சங்கர் மற்றும் இவானா உள்ளிட்ட சிலரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
முதல் பாகத்தில் நடிகைக்கும் நடிகருக்கும் நெருக்கமான மற்றும் படுக்கையறை காட்சிகள் தாராளமாக செல்வராகவன் காட்டியிருப்பார்.
19 வருடத்திற்கு முன்பே அப்படி எடுத்தார் என்றால் இன்றை காலக்கட்டத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை அதிதி சங்கர் நடிப்பரா என்றும் இதற்கு அவரது அப்பா சங்கர் எப்படி அனுமதிப்பார் என்றும் கேள்வியாக எழுந்து வருகிறது.
