வரிசை கட்டிய படவாய்ப்பு!! போட்டோஷூட்டில் கவனம் செலுத்தும் சங்கர் மகள் நடிகை அதிதி..
பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர் மகள் டாக்டர் படிப்பை முடித்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் விருமன் படத்தில் கமிட்டாகினார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக நடித்த அதிதி முதல் படத்திலேயே பாடகியாகவும் கதாநாயகியாகவும் அறிமுகமாகி கலக்கினார். அப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் 25 லட்ச சம்பளத்தில் கமிட்டாகினார்.
விருமன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் மாவீரன் படமும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியிருந்தார். படமும் வெளியாகி 75 கோடி வசூலை பெற்றது.
இப்படத்தினை தொடர்ந்து அதிதி சங்கர் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தியும் வருகிறார். மேலும், விஷ்ணுவர்தன், ராம்குமார் இயக்கத்திலும் - விஷ்ணு விஷால் நடிக்கும் ராட்சசன் 2 படத்திலும் அதிதி கமிட்டாகி இருக்கிறார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி சங்கர், ரசிகர்களை கிரங்கடிக்க போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.