சில்லுன்னு ஒரு காதல் குட்டி ஐஸுவா இது!! புத்தாண்டு கொண்டாட்ட கிளாமர் புகைப்படங்கள்..
ஸ்ரேயா சர்மா
தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.
அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடைய 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததை அடுத்து பில்லு கேமர், நிர்மலா கான்வெண்ட் போன்ற படங்களில் நடித்து வந்தார். ஸ்ரேயா ரீஎண்ட்ரி அதன்பின் வாய்ப்பில்லாமல் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றியும் வருகிறார். நடிப்பை ஒதுக்கிவிட்டு இணையத்தில் ஆக்டிவாக இருந்து வந்த ஸ்ரேயா, நவம்பர் 22 ஆம் தேதி ரிலீஸான நாம் என்ற அஜய் தேவ்கன் படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.
தற்போது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.