நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போ எங்க இருக்காங்க தெரியுமா!! அவரே வெளியிட்ட க்யூட் கிளிக்ஸ்..
தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பெரும்பாலும் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இரு குழந்தைகளுக்கு அம்மா ரோல், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோல் என்று நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற தமிழ் படத்திலும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது, அப்பா வயது நடிகருக்கு ஜோடியாகவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. னில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தில் வெங்கடேஷின் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளாராம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
படங்களில் அடக்கவுடக்கமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ரியல் வாழ்க்கையில் கொஞ்சம் மாடர்ன் பெண்ணாக இருப்பார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
கிளாமர் லுக்கிற்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் நியூயார்க் நகருக்கு சென்று அங்கு சிகப்பு நிற மாடர்ன் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.