வாரணாசி படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா வாங்கிய சம்பளம்.. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தானா?
S. S. Rajamouli
Priyanka Chopra
Varanasi movie
By Kathick
கோலிவுட் திரையுலகில் தனது பயணத்தை துவங்கி, பாலிவுட்டில் தனி இடத்தை பிடித்து இன்று ஹாலிவுட்டில் ஜொலித்து கொண்டு இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படங்களில் ஒன்று வாரணாசி.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் மகேஷ் பாபு, பிரித்விராஜ் உடன் இணைந்து பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். நேற்று இப்படத்தின் டைட்டில் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், வாரணாசி படத்தில் நடிப்பதற்காக நடிகை பிரியங்கா சோப்ரா வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக பிரியங்கா ரூ. 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.