சீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது!! அப்பவே எப்படி இருக்காங்க பாருங்க...

Alya Manasa Japan Tamil Actress Actress
By Jai May 07, 2026 12:00 PM GMT
Report

ஆல்யா மானசா

சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆல்யா மானசா, சீரியலின் கதாநாயகனான சஞ்சீவ்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் ஒரு மகளை பெற்றெடுத்த ஆல்யா, ராஜா ராணி 2 சீரியலில் நடித்தார்.

சீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது!! அப்பவே எப்படி இருக்காங்க பாருங்க... | Actress Alya Manasa Shares 11 Std Japan Tour Photo

சீரியலில் இடையில் கர்பமான ஆல்யா, சீரியலில் இருந்து விலகி இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின் உடல் எடையை கட்டுக்கோபாக வைத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், யூடியூப் சேனல் ஆரம்பித்து பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் இனியா என்ற சீரியலில் நடித்தார். சீரியல் முடிவுக்கு வந்தப்பின் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பாரிஜாதம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா, 11ஆம் வகுப்பு படிக்கும் போது ஜப்பான் சென்ற அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.