காதலால் ஏமாந்து போன நடிகை அமலா பால்? விவாகரத்துக்கு பின் ராஜூ வீட்டில் செய்த செயல்

Amala Paul A. L. Vijay
By Edward Aug 02, 2022 04:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். மலையாள பெண்ணாக நடித்த முதல் படமே சர்ச்சையில் சிக்கித்தவித்தார். வாய்ப்புகள் வராது என்று இருந்த அமலாபாலுக்கு தேசிய விருது படமான மைனா படம் மிக முக்கியமாக அமைந்தது.

சிறப்பான நடிப்பை வெளிகாட்டி படவாய்ப்புகளை தட்டிச்சென்றார். முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் இடத்தினை கைப்பற்றியும் இருந்தார். இடையில் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபால சில ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அமலாபாலின் நடவடிக்கை தான் விவாகரத்துக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அமலாபால் தற்போது கடாவர் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜூ வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார் அமலா பால். அந்தவகையில், யாரையாவது இவனை எல்லாம் காதலித்தோமே என்று யோசித்தது உண்டா என்று ராஜு கேட்டுள்ளார். அதற்கு அமலா பால், இருக்கே, அப்படி ஃபீல் பண்ணி இருக்கேன்.

எல்லோருக்கும் நடக்கிற மாதிரி ஆரம்பத்தில் காதல் உடையும் பொழுது கஷ்டமாக இருவருக்கும் இருக்கதான் செய்யும். ஆரம்பத்தில் செட்டாகாமல் போக என்னால் அவரை மாத்த முடியாது என்பதை அறிந்து ஒதுங்கிவிட்டேன். காதல் தோல்வி ரெண்டு மூன்று முறை நடந்துள்ளது என்று கூறியுள்ளார் அமலாபால்.