2 மணி நேரம் சொல்லி, நைட் ஃபுல்லா ஷுட்!! நடிகை அம்பிகா ஓபன் டாக்...
நடிகை அம்பிகா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1985ல் வெளியான படிக்காதவன் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அம்பிகா.

1982ல் 'குத் தார்' என்ற படத்தின் ரீமேக்கான படிக்காதவன் படம் மிகப்பெரிய வரவேற்பை நடிகை அம்பிகாவிற்கு கொடுத்தது. இப்படத்தில் இடம்பெற்ற ஊர தெரிஞ்சுக்கிட்டே பாடலில் தான் எப்படி நடித்தேன் என்று நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார் நடிகை அம்பிகா.
2 மணி நேரம் சொல்லி
அதில், வாய் கொடுத்து மாட்டிக்கிட்டோம்னு சொல்லுவாங்கல்ல, அந்த மாதிரி மாட்டிக்கிட்டேன். ஊர தெரிஞ்சுக்கிட்டே பாடலில் நான் இல்லை. நானும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். உடனே ராஜா சார் இயக்குநரிடம் சென்று, அம்பிகாவும் பாட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.

முதல் இரு வரி பாடிட்டு போய்விடுவோம் என்று பார்த்தால் ஒரு இரண்டு மணிநேரம் தான் என்று இயக்குநர் சொன்னார். அதன்பின், இரண்டு மணி நேரம் நான்கு மணிநேரமானது, இரவு முழுவதும் படப்பிடிப்பு நடந்தது. அந்தப்பாடல் முழுவதிலும் நான் இருந்தேன்.
ரஜினி சார் ஜோடி கிளி பாடல் தான் பெரிய ஹிட்டாகும் என்று சொன்னார். கடைசியில் ஊர தெரிஞ்சிக்கிட்டே பாடல் தான் ஹிட்டானது. நானே மாட்டிக்கிட்டேனே என்று ஃபீல் பண்ணிருந்தாலும் அந்தப்பாட்டை நான் பண்ணவில்லை என்றால் பெரிய தப்பா போயிருக்கும் என்று அம்பிகா தெரிவித்திருக்கிறார்.