பாட்டுபாட சொல்லி வற்புறுத்திய நபர்கள்!! கையெடுத்து கும்பிட்ட நடிகை ஆண்ட்ரியா...
நடிகை ஆண்ட்ரியா
தென்னிந்திய சினிமாவில் நடிகையாக பின்னணி பாடகியாக திகழ்ந்து வரும் நடிகை ஆண்ட்ரியா, கண்ட நாள் முதல் படத்தில் இருந்து அறிமுகமாகி பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, துப்பறிவாளன், வடசென்னை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானர்.
பின்னணி பாடகியாக பல வெற்றிப்பாடல்களை கொடுத்தும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணியாற்றி வருகிறார். இசைக்கச்சேரிகளிலும் கடைத்திறப்பு விழாக்களிலும் கலந்து வரும் ஆண்ட்ரியா, சமீபத்தில் திறக்கப்பட்ட ஒரு கடைத்திறப்பு விழா முடிந்து மைக்கில் பேசியுள்ளார்.
பாட முடியாது
அப்போது, அங்கிருந்த ஆண்கள் பலரும், ஆண்ட்ரியாவை பாடல் பாடுமாறு கேட்டதற்கு, அவர் பாட முடியாது என்று மறுத்தும் அவரை விடாமல் பாடச்சொல்லியுள்ளனர்.
குறிப்பாக கூலி படத்தின் மோனிகா பாடலை பாடக்கேட்டதற்கு பாட முடியாது என்று ஆண்ட்ரியா கையெடுத்து கும்பிட்டு மறுத்துள்ளார்.
பின் ஒருவழியாக புஷ்பா படத்தில் வரும் ஊ சொல்றியா மாமா பாடலை பாடி முடித்துள்ளார். இப்படி ஆண்ட்ரியாவிடம் நடந்துகொண்டவர்களை பலரும் கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பாட்டுப்பாடி செருப்பால அடிச்ச தருணம் 😂😄🤣 pic.twitter.com/MGxv7cdCiQ
— Swetha™ (@SwethaLittle_) August 21, 2025