17 வயதில் அந்த தப்பான பழக்கம்.. நடிகை அனிகா சொன்ன விஷயத்தை பாருங்க
Indian Actress
Anikha Surendran
Actress
By Dhiviyarajan
கடந்த 2015 -ம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா.
இப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. கடந்த ஆண்டு அனிகா ஹீரோயினாக நடித்து இரண்டு படங்கள் வெளிவந்தது. அந்த படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
அனிகா சினிமாவில் நடித்து பிரபலமானதை விட போட்டோஷூட் மூலமாக தான் சோசியல் மீடியாவில் சென்சேஷனலாக வலம் வருகிறது.

இந்நிலையில் அனிகா பேட்டி கொடுத்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அனிகாவிடம் நீங்கள் பீர் குடிப்பிங்களா இல்ல வைன் குடிப்பிங்களா என்று கேள்வி கேட்டனர்.
பதில் அளித்த அவர், எனக்கு வயது வெறும் 17 தான் ஆகுது. இந்த மாதிரி கேள்வி கேட்காதீங்க என்று அனிகா தெரிவித்து இருக்கிறார்.