அந்த மாதிரியான பையன் தான் கல்யாணம் பண்ணிக்கணும்.. அடம்பிடிக்கும் அஞ்சலி
Anjali
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை அஞ்சலி. இவர் ஜீவா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அஞ்சலி.
இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது அஞ்சலி தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC15 படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அஞ்சலி, "என்னை பொருத்தவரை நல்ல பையன் என்பவர் திருமணமான பிறகும் மரியாதை கொடுக்க வேண்டும். இதையடுத்து தான் அன்பு, காதல் எல்லாம். இது போன்று இருக்கும் பையனை தான் எனக்கு பிடிக்கும்" என்று கூறியுள்ளார்.