பீரியட்ஸ் நேரத்தில் தான் அந்த மாதிரி நடக்கும், அதுக்கெல்லாம் நோ சொல்லுவேன்.. நடிகை அஞ்சலி வெளிப்படை
ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அஞ்சலி.
முதல் படத்திலேயே இவர் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர் பலரையும் கவர்ந்தார். இதனது அடுத்து ஆயுதம் செய்வோம், தூங்கா நகரம், கோ, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை, இறைவி, தரமணி, நாடோடிகள் 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அஞ்சலியை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்த நிலையியல் சினிமாவில் சற்று விலகி இருந்தார். தற்போது மீண்டும் அஞ்சலி கம்பேக் கொடுத்து இருக்கிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அஞ்சலி, எனக்கு எப்போதெல்லாம் பீரியட்ஸ் நேரம் வருகிறதோ அப்போதுதான் மழையில் நனைந்தபடி நடிக்கக்கூடிய காட்சிகள் வரும். அந்த சமயத்தில் தான் குளிப்பது போன்ற காட்சிகள் வரும்.
இல்லையென்றால் பாடல் காட்சிகள் வரும்.
மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய காட்சிகள் வைப்பார்கள். அதனால் என்னுடைய பீரியட்ஸ் நேரங்களில் இயக்குனரிடம் இந்த மாதிரியான காட்சிகள் எல்லாம் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிடுவேன் என பேசியுள்ளார்.