அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்ட பெரிய இயக்குனர்!! உண்மையை உடைத்த நடிகை அனுஜா ரெட்டி..
சினிமாவில் மட்டுமில்லாமல் பல துறைகளில் பெண்களுக்கு எதிராக பல தொல்லைகள் நடப்பது சாதாரணமாகிவிட்டது. அதனை பலர் வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அதிலும் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் வாய்ப்பிற்காக என்னென்ன செய்ய சொல்கிறார்கள் என்று ஓப்பனாக பேசி வருகிறார்கள். அந்தவகையில் 90ஸ் காலக்கட்டத்தில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி பிரபலமான நடிகை அனுஜா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
பல படங்களில் நடிகர் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்த அனுஜா, விஜய்யுடன் ஒரு ஐட்ட பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார். தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் அதிகமாக நடித்திருக்கும் அனுஜா, மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், மலையாளத்தில் நடிக்க பயம் என்று கூறியிருக்கிறார்.
அவர் கூறுகையில், மலையாளத்தில் அந்தமாதிரியான படங்கள் எல்லாம் எடுப்பதாலும் நாமும் அந்த வளையத்திற்குள் சிக்கிவிடக்கூடாது என்று கவனமாக இருந்ததேன் என்று கூறியிருக்கிறார். அப்படி பெரிய நடிகரின் படத்தில் 2-ஆம் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. மிகப்பெரிய இயக்குனர் எடுத்த படம்.
அந்த இயக்குனர் தன்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசினார். நீ ஓகே சொன்னால் நீ இந்த படத்தில் 2-ஆம் ஹீரோயினாக நடிப்பாய் என்று கூறியிருக்கிறார். ஆனால் முடியவே முடியாது என்று கூறி மறுத்துவிட்டதாக அனுஜா தெரிவித்துள்ளார்.
பின் அந்த ரோலுக்கு பல நடிகைகளை தேடி பார்த்ததில் யாருமே செட்டாகவில்லை என்பதால் மீண்டும் நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அனுஜா முடியாது என்று மீண்டும் கூறி மறுத்ததாக கூறியிருக்கிறார்.