நடிகை அனுஷ்காவின் அண்ணனை கொலை செய்ய திட்டம்.. சோகத்தில் குடும்பம்

Anushka Shetty
By Kathick Jun 13, 2022 06:15 PM GMT
Report

பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு குணரஞ்சன் ஷெட்டி என அண்ணன் ஒருவர் இருக்கிறார். இவர், ஜெய கா்நாடகா ஜனபர வேதிகே என்ற அமைப்பின் தலைவரான முத்தப்பா ராயின் நெருங்கிய ஆதரவாளர் ஆவாரம்.

இந்நிலையில், அனுஷ்கா ஷெட்டியின் அண்ணன் குணரஞ்சன் ஷெட்டியை கொலை செய்ய சதித்திட்டம் நடப்பதாகவும், அதனால் அவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறி, மாநில உள்துறை அமைச்சருக்கு, ஜெய கா்நாடகா ஜனபர வேதிகே அமைப்பின் நிர்வாகிகள் கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளனர்.

மன்வித் ராய் மற்றும் ராகேஷ் மல்லி என்பவர்களுக்கு, அனுஷ்கா ஷெட்டியின் அண்ணன் குணரஞ்சன் ஷெட்டிக்கும் பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. மன்வித் ராய் மற்றும் ராகேஷ் மல்லி இருவரும் முத்தப்பா ராயின் ஆதரவாளர்களாம்.

இந்நிலையில், மன்வித், ராகேஷ் தான், இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி அனுஷ்காவின் குடும்பத்தை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.