அப்பா நீங்க இல்லாதபோதுதான் உணர்கிறேன்!! பாக்யராஜ் மகள் சரண்யா எமோஷனல்..
கே பாக்யராஜ்
திரைக்கதை மன்னன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் கே பாக்யராஜ் கடந்த ஜூன் 27 ஆம் தேதி காலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் இறப்பு தமிழ் சினிமாத்துறையையே சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் பாக்யராஜின் மகள் சரண்யா பாக்யராஜ், இன்ஸ்டாகிராமில் ஒரு எமோஷனலான வீடியோ பதிவையும், தன்னுடைய தந்தையுடன் வீடியோ காலில் பேசிய வாட்ஸ் அப் கால் லாக் ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.
மேலும், இனிமேல் என் தினசரி கால் லாக் இப்படியே இருக்கப் போவதில்லை... என்னுடைய அதிகபட்ச மிஸ்டு கால்கள் எல்லாமே உங்களிடமிருந்து வந்தவை என்பதை இப்போதுதான் உணர்கிறேன் என்றும் பகிர்ந்துள்ளார்.

மேலும் மிஸ்டு கால்களாக இருந்தவை இன்று வாழ்நாள் முழுவதும் மிஸ் பண்ணப் போகும் நினைவுகளாக மாறிவிட்டதே", "அப்பா இருந்தபோது சாதாரணமாக தெரிந்த கால் லாக், இன்று பொக்கிஷமாகிவிட்டது என்றும் கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

