விஜய் அப்படி பண்ணுவாரு நினைக்கல.. நடிகை அனுஷ்கா பேட்டி
அனுஷ்கா கடந்த 2005ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். சினிமாவுக்கு வந்த புதிதில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த இவர், அருந்ததி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத்திறனைவெளிப்படுத்தி தன்னை ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்தார்.
தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்து கொண்டிருந்த சமயத்தில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்தார். ஆனால் இந்த படம் பெரும் தோல்வியை தழுவியது. இப்படத்திற்கு பின் அனுஷ்கா பல பட வாய்ப்புகளை இழந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அனுஷா, விஜய் உடன் இணைந்து நடித்தது தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர், வேட்டைக்காரன் படத்தின் என் ஊச்சி மண்டேலே என்ற பாடலின் படப்பிடிப்புக்கு செடிக்கு சென்று இருந்தேன். அங்கு அமர்ந்து விஜய் பார்த்து கொண்டு இருந்தார்.
ஷாட்டுக்காக நாங்கள் ஒன்றாக நின்றோம். ஷாட் ரெடியானதும் அவர் நடனத்தை பார்த்து நான் ஷாக் ஆகிவிட்டேன். என்னால் ஒண்ணுமே பண்ண முடியவில்லை. ஒரு முறை பார்த்துவிட்டு அவர் எப்படி அந்த மாதிரி நடனமாடினார் என்று எனக்கு தெரியவில்லை என அனுஷ்கா கூறியுள்ளார்.