மரியாதை இல்லாமல் சூப்பர் ஸ்டாரை திட்டிய பிரபல நடிகை!! மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்திய ரசிகர்கள்..
முன்னணி நடிகர்களாக திகழும் நடிகர்கள் அனைவரும் ரஜினிகாந்தை போல் நடிக்க வேண்டும் புகழ பெற வேண்டும் நினைத்து வருவதுண்டு. அப்படியான புகழின் உச்சத்தில் இருப்பவர் தான் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாராக தன் ஸ்டைலில் அனைவரையும் தன் பக்கம் இழுத்து வந்த ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஒரு நடிகை அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
அந்தவகையில் 80, 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார் நடிகை வடிவுக்கரசி. 60 வயதான நிலையில், 350க்கும் மேற்பட்ட படங்களிலும், 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். அப்படி ஹிட் அடித்த படத்தின் நடிகரின் ரசிகரால் தலைமறைவானார். சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் அருணாச்சலம்.
இப்படத்தில் வடிவுக்கரசி வேதவல்லி என்னும் வில்லத்தனமான பாட்டியாக நடித்திருப்பார். இப்படத்தில் ரஜினியை பார்த்து இவர் ஆனாத பயலே எனும் கூறும் போது வடிவுக்கரசி நடிப்பை பார்த்து ரஜினியே மிகவும் பாராட்டி கண்ணத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.
ரஜினியிடம் பாராட்டு வாங்கிய வடிவுக்கரசி ரசிகர்களிடம் திட்டு வாங்கி கொண்டார். இந்த படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற போது வடிவுக்கரசி கூறிய வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ரயிலில் பயணம் செய்வதற்காக வடிவுக்கரசி சென்றுள்ளார்.
வடிவுக்கரசி ரயிலில் இருந்ததை பார்த்த ரசிகர் ஒருவர் உடனே ஓடிச்சென்று ரயில் தண்டவாளத்தில் நடுவில் படுத்து உள்ளார். பின்பு நான் தண்டவாளத்தை விட்டு எழுந்து வர வேண்டும் என்றால் என்னுடைய தலைவனை பற்றி தவறாக அனாதை பயலே என வடிவுக்கரசி பேசியதற்கு மன்னிப்புக் கூறவேண்டும் எனக் கூறியுள்ளார்.
பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் வடிவுக்கரசி தன்னால் ரயிலில் இருக்கும் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக நான் படத்தில் பேசியது தவறுதான் என மன்னிப்பு கேட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் 30 நாட்களுக்கு மேல் தலைமறைவாக வாழ்ந்துள்ளார். இதை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறக்கிறார் நடிகை வடிவுக்கரசி.